எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை வருகிறார் நடிகர் கருணாஸ்
கதிர்காம கந்தனைத் தரிசிக்கின்றமைக்காக குடும்ப சமேதராக இலங்கை வருகின்றார் என தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கருணாஸ் அறிவித்துள்ளார் கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்திக் கடன் வைத்திருக்கின்றார் என்றும் அதை நிறைவேற்றுகின்றமைக்காகவே தற்போதைய உற்சவ காலத்தில் காலத்தில் இந்த தல யாத்திரையை மேற்கொள்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர் கோவிலில் மகனுக்கு மொட்டையடிக்கவும் உள்ளாராம். நேற்று காலையில் பயணத்துக்கான விமானச் சீட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். இவருக்கு இலங்கையில் உறவினர்கள் இருக்கின்றார்கள் என்றும் இந்த உறவினர்களையும் சந்திப்பார் என்றும் அவர் கூறி உள்ளார்.
ஆனால் இவர் சிங்கள வானொலி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்தியப் பணமாக 10 இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கின்றார் என்றும் இந்நிகழ்வில் பங்குபற்றுகின்றமைக்காகவே இலங்கைக்கு குடும்ப சமேதராக செல்கின்றார் என்றும் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புக்கள் இவருக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளன.
இந்நிலையில் எழும்பூரில் உள்ள சென்னை பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு சென்ற கருணாஸ் அவருக்கு நாம் தமிழர் இயக்கத்தினர் இலங்கை செல்ல வேண்டாம் என்று மிரட்டி கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல்களை அனுப்புகின்றார்கள் என்று முறையிட்டுள்ளார்.
அவருக்கும், குடும்பத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி உள்ளார். கருணாஸின் முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply