பிரிட்டிஷ் பெட்ரோலியம் தலைவர் பதவி விலகலாம்

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து அதன் தலைவர் டோனி ஹேவர்ட் விலகுவார் என்று  தெரியவந்துள்ளது.மெக்சிகோ வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் சிந்திய விவகாரத்தில் அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் டோனி ஹேவர்ட்.

தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான விவாதங்களில் அவர் இப்போது ஈடுப்பட்டு வருவதாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், டோனி ஹேவர்ட் அவர்களுக்கு நிர்வாக குழுவின் முழு ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது.

வளைகுடா பகுதியில் எண்ணெய் சிந்தியதால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு முப்பது பில்லியன் டாலர் வரையில் தேவைப்படலாம் என கணக்கீடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply