முகமாலை, கிளாலி முன்னரங்கப் பகுதியில் மோதல்?
யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் கிளாலிப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்று வருவதாக யாழ் தகவல்கள் கூறுகின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியிலிருந்து தென்மராட்சிப் பகுதியில் கடும் ஷெல் வீச்சுச் சத்தங்கள் கேட்டவண்ணமிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.ஷெல் தாக்குதல்களால் தென்மராட்சிப் பகுதி அதிர்வதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், வழமைக்கு மாறாக இராணுவத்தினரின் வாகனங்கள் தென்மராட்சிப் பகுதி வீதிகளில் சென்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply