ஈரான் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி தடைகள்
ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறைகளை இலக்காகக்கொண்டு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. அண்மையில் அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்திருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகளானது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை விட அதிகமாகும்.
மேற்படி தடைகள் ஈரானை அதன் அணு உற்பத்தி தொடர்பாக உலக வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழுத்தம் கொடுக்கும் முகமாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து கனடாவும் பல்வேறு தடைகளை அமுல் அமுல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் இந்நடவடிக்கையானது வெற்றியளிக்க கூடியதள்ளவென்றும் இது மேற்குலக நாடுகளுடனான தமது உறவை மேலும் சீர்குலைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமானது ஈரானின் வலு சக்தி துறை சார்ந்த எண்ணேய் அகழ்வு ,இயற்கை வாயு கண்டுபிடிப்பு, மற்றும் உற்பத்தி போன்றவற்றுக்கான தொழில்னுட்ப உபகரண விற்பனை மற்றும் சேவைகள் என்பனவற்றிற்கு தடை விதித்துள்ளது. ஈரானின் 40 தனிநபர்களின் மற்றும் 50 கம்பனிகளின் பெயர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கான 40,000 யூரோ விற்கு மேற்ப்பட்ட எந்தவொரு பணப்பரிமாற்றத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி பெறப்படவேண்டும் இதனால் ஈரானின் வங்கித்துறையும் பாதிக்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply