பிரணாப் முஹர்ஜியின் விஜயத்தை வரவேற்கிறார் ரணில்
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி இலங்கை வருவதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.
நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுவது உதவியானதாக இருக்கும் என ஐ.தே.க.வின் பதில் செயலாளராக கரு ஜெயசூரிய பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
வீணாக இந்தியாவை வெறுக்கக்கூடாது. முஹர்ஜியின் இலங்கை விஜயம் பிரச்சினைக்குரியதாக இருந்தாலும் அரசாங்கமே அவருக்கான அழைப்பை விடுத்துள்ளது” என ரணில் விக்ரமசிங்க கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடைசெய்திருப்பதால், அந்நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பிரச்சினையைத் தராது எனக் குறிப்பிட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க, பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு முன்னர் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, கிளிநொச்சி கைப்பற்றப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
எனினும், சில காரணங்களுக்காக கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என முன்னர் கூறிவந்த அரசாங்கம் தற்பொழுது தனது திட்டத்தை மாற்றி முல்லைத்தீவு மீது கவனம் செலுத்தியுள்ளது” என்றார் அவர்.
இதேவேளை, நாட்டில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கமும் சரியான திட்டத்தை வகுக்கவில்லையென ரணில் விக்ரமசிங்க கூறினார்.
தற்பொழுது தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடி 10 வருடத்துக்கு நீடிக்கும் என சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சரியான திட்டமொன்றை வகுத்திருப்பது அவசியமானது” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply