இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார். உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத்கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், மா என்பன அமெரிக்காவில் இருந்தும் சீனி, அரிசி, உப்பு என்பன அரபு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகிறது.

இவற்றை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கேள்வி மனுக்கோரி குறைந்த விலையில் பெற்றபின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிப்பதாக உலக உணவுத் திட்ட பிரதிநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply