மட்டக்களப்பில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்
அரசின் ஒரு வகையான காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில்- காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட ஆரையம்பதி கிராமத்தில் வாழும் ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் காணிகளை காத்தான்குடி நகரசபை அபகரித்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டியே இப்போராட்டத்தை முடுக்கி விட்டுள்ளார்கள். இப்படிப் பறித்தெடுத்திருக்கும் நிலங்களை காத்தான்குடி நகரசபை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.அத்துடன் பிரதேச செயலகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு நிரந்தர தீர்வையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோருகின்றார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply