இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஜப்பான் தயார்
ஜப்பான் இலங்கையுடன் விசேட வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஜப்பானிய பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் ஜப்பானிய பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் மசாயுகி நஞ்சியைச் சந்தித்துப் பேசினர். இதன்போது, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றி பேசப்பட்டது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை இலங்கையுடன் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசு தயாராகவுள்ளது என்றார்.இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட ஜப்பான் சகல வழிகளிலும் உதவும் என ஜப்பானிய அமைச்சர் உறுதியளித்தார். பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமாதான முன்னெடுப்புக்களில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் விளக்கினார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை விரைவாக மீளக்குடியேற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை ஜப்பானிய அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.ஜப்பானிய வர்த்தக சம்மேளனத்தினரையும் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் சந்தித்துப்பேசினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply