மாந்தை மேற்கு காட்டுப்பகுதியினுள் கண்டுபிடிக்கப்பட்ட யானை இன்று சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் ஊடுருவிய யானை வனப்பரிபாலன அதிகாரிகளினால் இராணுவத்தினதும் பொதுமக்களினதும் உதவியுடன் இன்று (30.07.2010) ஏற்றிச்செல்லப்பட்டிருக்கின்றது. நேற்றய தினம் அடம்பன் பிரதேசத்தில் நுழைந்த மேற்படி யானையினைத்தேடி இராணுவத்தினர் தமது நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர் இதனை அடுத்து இராணுவத்தினரிடமிருந்து கிடைக்கப்பட்ட தகவலையடுத்து அனுராதபுரம் வனவிலங்கு அதிகாரிகள் குழு நேற்றய தினம் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை கடந்த 3 தினங்களாக முருங்கன், சிறுநாவற்குளம், வங்காலை பிரதேசத்திற்குள்; நுழைந்த குறித்த யானை நேற்றய தினம் அதிகாலை அடம்பன் பகுதியில் நடமாடியதாக பிரதேச மக்கள் அப்பிரதேச இராணுவத்தினருக்கு தெரிவித்திருந்தனர். முருங்கன் சிறுநாவற்குளம் பகுதிவழியாக நுழைந்த யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன் நேற்று முன்தினம் வங்காலை பிரதேசத்திற்குள் நுழைந்து பின் அங்கிருந்து நேற்றையதினம் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட அடம்பன் பிரதேசத்திற்குள் நுழைந்தது.
மேற்படி யானையை தேடும் பணியில் இராணுவத்தினருடன் இணைந்து வனஇலாக அதிகாரிகளும் பொதுமக்களும் ஈடுபட்டதையடுத்து மேற்படி யானை நேற்று மாலை 212வது படைப்பிரிவின் பட்டாளியன் பகுதிக்குட்பட்ட காட்டுப்பகுதியினுள் வைத்து பிடித்திருக்கின்றனர்.
இதனை அடுத்து இன்று (30.07.2010) காலை வேட்டையான் முறிப்பு காட்டுப்புகுதியினுள் கட்டிவைக்கப்பட்டிருந்த யானையினை தள்ளாடி படைத்தலமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பிரிகேடியர் மைத்திரி டயஸ் 215 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விக்கும் லியனகே, ஏனைய இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இதனை பாhவையிட்டிருக்கின்றனர்.
வனஇலாகா அதிகாரிகளினால் வாகனத்தில் ஏற்றப்பட்ட குறித்த யானை குமன வனவிலங்கு சரணாலயத்திற்கு இன்று எடத்துச்செல்லப்படகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply