தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் தமிழ் அரங்கில் இணைவதில் தவறில்லை

தமிழர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதில் தவறில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றால், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைவந்து செயற்படத் தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இதுவரையில் நடத்திய நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பட்சத்தில் சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply