கொழும்பில் சியத ஊடக நிறுவனத்தின் தாக்குதல் அமெரிக்கா கண்டனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் சியத ஊடக நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை அமெரிக்கா கண்டித்துள்ளது.சியத ஊடக நிறுவனம் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக புரியப்படுகின்ற அனைத்து வன்முறைகளும் இலங்கையில் ஊடகவியலாளர்களை ஒடுக்கி ஊடக சுதந்திரத்தை மேலும் நசுக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பகமான விசாரணையின் மூலமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் என சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, பொலிசாரி்ன் விசாரணை குறித்த அறிவிப்பை வரவேற்பதாக மேலும் தெரிவித்துள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply