முன்னாள் புலிப்போராளிகள் 1,350 பேருக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்

கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் உள்ள முன்னாள் புலிப் போராளிகள் 1,350 பேருக்கு எதிராக அரசு விரைவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,“முன்னர் இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது மிகக் கொடூரமான குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

முன்னாள் புலிப் போராளிகளில் 650 பேர் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் 700 பேர் காலியில் உள்ள பூஸா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிராமங்களுக்கு தாக்குதல் நடத்தல், பொது இடங்களில் குண்டுத்தாக்குதல் நடத்தி அப்பாவிப் பொது மக்களை கொல்லல், பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கொல்;லல் போன்ற இவ்வாறான கொடூரமான குற்றங்களில் ஈடுபட்;டமை நிரூபணமாகியுள்ளமையினால் இவர்களுக்கு எதிராக வழக்கத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும் தாக்குதல் நடத்துவதற்கு தகவல்களை சேகரித்து வழங்கியவர்கள், ஆயுதங்களை கொள்வனவு செய்தவர்கள், இராணுவத்திற்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் ஆகியோரும் முன்னாள் புலிப்போராளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோரில் உள்ளடங்குகின்றனர்” என அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply