மெர்வின் செயலுக்கு ரணில் கண்டனம்
இலங்கை அரசின் அமைச்சர் மெர்வின் சில்வா ஒரு அரசு அதிகாரியை மரத்தில் கட்டி வைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதிகாரியை மரத்தில் கட்டி வைத்தார் அமைச்சர் மெர்வின் சில்வா என்று சர்ச்சை இந்த அராஜகத்தை கண்டித்துள்ள அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை இன்று நாடு தழுவிய அளவில் ஒரு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
நாட்டில் கொசுவினால் ஏற்படும் டெங்கு நோயை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த அரசு அதிகாரி கலந்து கொள்ளாத காரணத்தாலேயே அவரை அமைச்சர் தண்டித்துள்ளார். டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் பலர் பலியாகியுள்ளனர்.அமைச்சர் மெர்வின் சில்வாவின் இந்த செயல் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயலாகும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
தெரிந்தே ஒருவருக்கு பாதகம் செய்வது இலங்கை அரசியல் சாசனத்தின்படி தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மெர்வில் சில்வாவை கண்டித்து நாட்டிலுள்ள்ள பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்னர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை தாங்கள் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் சில்வாவின் நடவடிக்கை கட்சியில் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார், ஆனால் கூடுதல் கருத்துக்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
ஒரு மாமரத்தில் அந்த அதிகாரி அமைச்சரால் கட்டி வைக்கப்பட்ட படங்கள் உள்ளூர் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.அவரை மரத்தில் கட்டி வைத்த சம்பவம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தது.தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே தாம் டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என அந்த அதிகாரி கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply