பிரதி அமைச்சர் மேர்வின் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம் : சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடிதம்

சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிப் போட்டமைக்காக பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்பது உட்பட ஏராளமான நிபந்தனைகளை முன்வைத்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

இந்நிபந்தனைகளை நிறைவேற்றா விட்டால் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றப் போவது இல்லை என்றும் அத்தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தவறினால் இனிவரும் நாட்களில் இன்னும் பலமான அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று இத்தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply