இன்று மாவிட்டபுரம் கந்தன் தேர் திருவிழா
வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலையில் இடம் பெற்றது. அதிகாலையில் வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து. காலை 10.40 மணியளவில் சுவாமி வெளி வீதி வந்து, தேரில் ஏறி திருவீதியுலா சென்றார்.
கடந்த பல வருடங்களாக ஆலயத்தில் திருப்பணி இடம்பெற்று வருகிறது. தற்போது இடம்பெற்று வரும் காம்யோற்சவத்தை ஒட்டி சுவாமி ஒரு தேரில் மட்டும் வீதி உலா வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சுவாமி தேரில் உலா வரும் திருக்காட்சியை தரிசிக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டார்கள் .
பொது மக்களின் போக்குவரத்து நன்மை கருதி காலை முதல் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்தும், ஏனைய இடங்களில் இருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் மாவிட்டபுரம் ஆலயம் வரை சேவையில் ஈடுபட்டன.
தனியார் மினி பஸ் சேவைகளும் இடம்பெற்றன. ஆலயத்தில் அடியவர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியடித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள். வீதிக்கு வீதி மாவைக் கந்தனுக்கு தேங்காய்கள் உடைத்தும் வழிபாடுகளை நிறைவேற்றினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply