மடுமாதாவின் வருடாந்த ஆவனித்திருவிழா ஆரம்பித்திருக்கின்றது

மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவனித்திருவிழா திட்மிட்டப்படி இம்மாதம் 6ம் திகதி மாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பித்திருக்கின்றது. யுத்தம் முழுமையாக முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்று வரும் இரண்டாவது வருடாந்த ஆவனித்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக மடுத்திருத்தலத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

இம்மாதம் 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை இடம்பெறவிருக்கும் மடு அண்னையின் வருடாந்த ஆவனித்திருவிழாவானது இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய குடும்ப விழாவாக கொண்டாடப்பட இருப்பதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்கடர் சோசை அடிகளார் தெரிவிக்கின்றார்.

இவ்வருடத்திற்கான மடுத்திருவிழா தேசிய குடும்ப விழாவாக கொண்டாடப்பட இருப்பதால் கொடியேற்ற நாள் தொடக்கம் எதிர்வரும் பதினைந்தாம் திகதி நாட்களும் இடம்பெறவிருக்கும் மறையுறைகள் “கிறிஸ்தவ குடும்ப வாழ்வு” என்பதனை மையப்பொருளாக கொண்டதாகவே அமையும் எனவும் குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்கடர் சோசை அடீகளார் தெரிவிக்கின்றார்.

இதேவேளை திருவிழாக்காலங்களில் திருத்தலத்தில் குடும்பவாழ்வு எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தமர்வுகளும் சொற்பொழிவுகளும் இடம்nறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மடு மாதாவின் ஆவணித்திருவிழா இம்மாதம் 15ம் திகதி; காலை திருவிழாத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் அண்னையின் திருச் சொரூப சுற்றுப்பிரகாரம், திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் நிறைவடையும். 

விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை திருச்செபமாலையும் விசேட ஆராதனைகளும் இடம்பெறும்;, 14ஆம் திகதி மாலை 6.25 மணிக்கு நற்கருணை எழுந்தேற்றம் இடம்பெற்று 15ஆம் திகதி காலை 6மணிக்கு ஆயர்களின் தலமையில் கூட்டுத்திருவிழாத்திருப்பலி இடம்பெறும்.

 மடு திருத்தலத்திற்கு வரும் பக்த அடியார்கள் எவ்வித கழியாட்டங்களும் இன்றி திருத்தலத்தின் புனிதத்தன்மையை பேணி நடக்குமாறு மடு பரிபாலகர் அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அடிகளார் கேட்டுக்கொள்கின்றார்.  இதனிடையே மடுத்திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவை யொட்டி விசேட ரயில், பஸ் சேவைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருவிழாவுக்குச் செல்லும் யாத்திரிகர்களின் நன்மை கருதி வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக சேவைகளை நடத்தவும் இதனோடிணைந்ததாக மதவாச்சியிலிருந்து விசேட பஸ் சேவைகள் இமடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு – மதவாச்சி, களுத்துறை – மதவாச்சி, மதவாச்சி – மொரட்டுவை, மதவாச்சி – களுத்துறை மற்றும் கொழும்பு கோட்டை – மதவாச்சி என இந்த ரயில் சேவைகள் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிணங்க 13, 14ம் திகதிகளில் நீர்கொழும்பிலிருந்து மதவாச்சிக்கும் 14ம் திகதி களுத்துறையிலிருந்து மதவாச்சிக்கும், 15ம் திகதி மதவாச்சியிலிருந்து மொரட்டுவைக்கும், மதவாச்சியிலிருந்து களுத்துறைக்கும் இந்த ரயில் சேவைகள் இடம்பெற இருக்கின்றது. அதேவேளை வழமையான ரயில்களின் பயணிகள் பெட்டிகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply