மன்னார் – பண்டிவிரிச்சான் போக்குவரத்து சேவையினை அரச பேருந்துகள் ஆரம்பித்திருக்கின்றன

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை போக்கு வரத்து சபையின் மன்னார் சாலை இரு சேவைகளை ஆரம்பித்திருக்கின்றன. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில்; பெரிய பண்டிவிருச்சான் பகுதியைச்சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தொடக்கம்; அப்பகுதிகளில்; மீள் குடியேறி வரும் நிலையில் அவர்களின் போக்கு வரத்தினைக்கருத்தில் கொண்டு இச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட நாள் தொடக்கம் மன்னாரில் இருந்து தனியார் பேரூந்து ஒன்றே போக்கு வரத்து சேவையில் நாள் ஒன்றிற்கு 2 தடவைகள ஈடுபட்டு வருவதாகவும்; அச்சேவைகள் தமக்கு போதுமானதாக இல்லை எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே இலங்கை போக்கு வரத்து சபையின் மன்னார் சாலை இம்மாதம் தொடக்கம்; பண்டிவிரிச்சான் பகுதிக்கு தமது பேரூந்துகளை போக்கு வரத்து சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. 

இதன்படி மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு பண்டிவிரிச்சான் நோக்கிப்புறப்படும் பேரூந்து மன்னார் மதவாச்சி வீதி வழியாக சென்று மடுச்சந்தி, மடுத்திருத்தலம் ஊடாக பண்டிவிரிச்சான் பிரதேசத்தை சென்றடைகின்றது. இவ்வாறு சென்றடையும் குறித்த பேரூந்து பண்டிவிரிச்சானில் இருந்து நன்பகல் 12.00 மணியளவில் புறப்பட்டு மீண்டும் அதே வழியாக மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை வந்தடைகின்றது. இதன் பின் மாலை 4.00 மணியளவில் மன்னாரில் இருந்து பண்டிவிரிச்சான் நோக்கிப்புறப்படும் பேரூந்து இரவு அப்பகுதியில் தரித்திருந்து மறுநாள் காலை 6.30 மணிக்கு மன்னார் நோக்கி புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply