கீரிமலையில் ஆடி அமாவாசை

அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கீரிமலை தீர்த்தக்கேணியில் பொதுமக்கள் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர் கடன் செலுத்த பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதிக்கப்பட்டார்கள். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கீரிமலைக்கு வந்து பிதிர்க்கடன் செய்தார்கள். பொது மகக்ள் கேணியில் நீராடவும் அனுமதிக்கப்பட்டார்கள். அத்துடன் கடற்படையினரின் பாதுகாப்புடன் கடலிலும் நீராடவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

இதேவேளை வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று காலையில் கீரிமலையில் உள்ள கண்டாங்கி தீர்த்தத்தில் இடம் பெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply