மஹிந்த – ரணில் அவசர சந்திப்பு! அடுத்த கட்ட பேச்சும் தொடரும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று அலரிமாளிகையில் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பீ.திகாம்பரம்,பிரபா கணேசன் ஆகிய இருவரும் அண்மையில் அரசில் இணைக்கப்பட்டமையால் எழுந்துள்ள நிலைமை குறித்தும், அடுத்த கட்டப் பேச்சுக்கள் குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க, அக்கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் ஆகியோர் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் சந்தித்துப் பேசுவார்கள் என்று இச்சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அரசமைப்புத் திருத்தம் குறித்து தொடர்ந்து உரையாடலாம் என இன்றைய சந்திப்பின்போது இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்கள் என்று ஐ.தே.க நாடாளுமன்ற உறிப்பினர் கபிர் காசிம் எம்.பி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply