வன்னியில் இராணுவச் சீருடைகள் களவாடப்பட்டுள்ளன

வன்னியில் சிறிய இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வரும் படைவீரர்களது களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துவைத்து காயப் போடப்பட்ட சீருடைகளே இவ்வாற களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்தச் சம்பவம் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீருடைகளை களவாடிய நபர்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

பிரதேச மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.களவாடப்பட்ட இராணுவச் சீருடைகள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு படையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply