வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் பட்டப்படிப்பு 200 புலமைப்பரிசில்கள் வழங்கவும் நடவடிக்கை

வெளிநாட்டு மாணவர்கள் உள்ளூரில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சு அடுத்த வருடம் 200 புலமைப்பரிசில்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் முதலாவது தொகுதியாக சீனா, மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் பயனடைவர்.

இலங்கை பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைச்சு அபிவிருத்தி செய்யவுள்ளது. 10 ஆயிரம் வெளிநாட்டு மாணவர் களை கவரும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதற்கு இது நல்ல வழியாகும். 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு பட்டமொன்றை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கூறுகிறார். 13 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள், பிரின்டர்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களை தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படு த்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகர் 50 பஸ்களையும் 50 ஜீப் வண்டிகளையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய உயர் கல்வி அமைச்சரை அடுத்த மாதம் தான் சந்திக்க திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply