‘சூப்பர் பக்’ பாக்டீரியாக்கு ‘டெல்லி’ என்று பெயர் வைத்தமைக்கு கண்டனம்

என்.டி.எம்-1 கிருமி இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளில் பரவிவருவதாக ஐரோப்பிய நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய மருத்துவக்கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பாக்டீரியாவை அதிகசக்தி வாய்ந்த எதிர்ப்பு மருந்துகளால் கூட அழிக்க முடியாது என்று லேன் செட் என்ற மருத்துவ ஆராய்ச்சி இதழில் தகவல் வெளியிடப்பட்டது.

மிகப்பயங்கரமான இந்த பாக்டீரியா சூப்பர் பக் என்றழைக்கப்படுகிறது. இந்த கிருமி இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் பரவி விட்டதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள்.

அதை ஆவணங்களிலும் பதிவு செய்யும் வகையில் புது வகை பாக்டீரியா கிருமிக்கு “புதுடெல்லி மெட்டல்லோ- பீட்டா – லேக் டோமோஸ் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

சுருக்கமாக இதை மருத்துவ உலகில் என்.டி.எம்.-1 என்று சொல்கிறார்கள். இந்த கிருமி தாக்கினால் கடுமையான காய்ச்சல் ஏற்படும். அதன் தொடர்ச்சி யாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

என்.டி.எம்-1 கிருமி இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளில் பரவிவருவதாக ஐரோப்பிய நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய மருத்துவக்கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவக்கவுன்சில் ஆராய்ச்சிப் பிரிவுத்தலைவர் வி.எம்.கடோச், சுகா தாரத்துறை இயக்குனர் ஆர்.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுவகை பாக்டீரியா இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. இந்திய மருத்துவத்துறை மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இந்ததகவல்களை வெளியிட்டுள்ளனர்.

புதுவகை பாக்டீரியா ஒன்று உலகில் தோன்றி இருப்பதை பல மாதங் ளுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டனர். இந்த புது பாக்டீரியா அமெரிக்கா, இஸ்ரேல், கிரீஸ், ஸ்காட்லாந்து உள்பட சில நாடுகளில் இருப்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால் திடீரென இந்த புதுவகை பாக்டீரியா இந்தியாவில் இருந்து பரவுவதாக கூறுவதில் உள் நோக்கம் உள்ளது. அந்தகிருமிக்கு புதுடெல்லி என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதிலும் சதி உள்ளது.

உலகையே அச்சுறுத்திய பன்றிக்காய்ச்சல் மெக்சிகோ நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. அந்த காய்ச்சலுக்கு மெக்சிகோ பெயர் சூட்டப்படவில்லை. அதுபோல ஆப்பிரிக்காவில் இருந்து மற்ற நாடுகளில் பரவிய எய்ட்ஸ் கிருமிக்கு ஆப்பிரிக்கா பெயர் சூட்டப்படவில்லை.

ஆனாலு புது பாக்டீரியா கிருமிக்கு புதுடெல்லி பெயரை ஐரோப்பிய விஞ்ஞானிகள் வைத்திருபப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் இந்தியா உலக அளவில் மிக அபரிதமான வளர்ச்சி யைப் பெற்றுள்ளது. விரைவான, மிகச்சிறப்பான சிகிச்சை இந்தியாவில் தான் கிடைப்பதாக வளர்ந்த நாட்டு மக்களிடம் கூட கருத்து உள்ளது. மேலும் இந்திய மருத்துவ மனைகள் மிக, மிக சுகாதாரமாக பராமரிக் கப்படுதாகவும் பாராட்டு பெற்றுள்ளது.

இது தவிர மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மிக, மிக குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சைகளை பெற முடிகிறது. இதனால் வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக சென்னையில் சிகிச்சை பெற வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு ஆண்டு தோறும் மருத்துவத்துக்கு வருபவர்கள் மூலம் ரூ.1200 கோடி வரை வருவாய் வருகிறது.

இது மேற்கத்திய நாடுகளின் கண்களை உறுத்தியபடி உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இந்திய மருத்துவத்துறையினர் வளர்ச்சி பலத்தசரிவை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஐரோப்பிய விஞ்ஞானிகள் திட்டமிட்டு இந்தியா மீது சேற்றை அள்ளி வீசுகிறார்கள்.

மேலை நாட்டுக்காரர்களின் இந்த பொய்பிரசாரத்தை தடுத்து முறியடிக்க எதிர்பிரசாரம் நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply