பொன்சேகா எதிராக இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு
இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் நடந்த முதல் வழக்கில் அவர் மீதான குறச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இராணுவத் தளபதியாக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டார் என்று அவர் மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தண்டனையாக, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றதன் பின்னர், சரத் பொன்சேகாவின் பதக்கங்களைப் பறித்து அவரது பெயருக்கு முன்னால் உள்ள ஜெனரல் என்ற இராணுவ அந்தஸ்து படிநிலையும் பறிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் இராணுவத்தினர் பெற்ற வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர் சரத் பொன்சேகா.
ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சரத் பொன்சேகா தோல்வியடைந்தார்.
தற்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வேறு குற்றச்சாட்டுகளுடன் இராணுவ நீதிமன்றத்தில் வேறொரு வழக்கும் சிவில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளும் நிலுவையில் இருந்துவருகின்றன. சரத் பொன்சேகாவுக்கு சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட முன்பதாகவே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply