மீள்குடியேற்றம் இல்லாமல் மக்கள் தவிப்பு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கிழக்கு எல்லைப்புறத்தில் உள்ள மயில்வாகனபுரம், குமாரசாமிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்கள் நீண்ட நாட்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து மீள் குடியேற்றத்திற்காக அவர்களது சொந்தக் கிராமங்களுக்கு இந்தக் குடும்பங்களை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ள போதிலும், அவர்கள் தமது சொந்தக் காணிகளுக்குப் போக முடியாத நிலையில் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றார்கள்.
மீள்குடியேற்றம் செய்யப்படுவதாகத் தெரிவித்து அழைத்துச் சென்ற போதிலும் தாங்கள் சொந்தக்காணிகளில் குடியமர அனுமதிக்கப்படாதிருப்பதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருப்பதாக இந்தக் கிராமங்களைச் சேர்ந்த வேறு இருவர் கூறுகின்றனர்.
தாமதமடைந்துள்ள தமது மீள்குடியேற்றம் தொடர்பாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் தமது பிரதேசத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் புதல்வருமாகிய நாமல் ராஜபக்சவின் கவனத்திற்கும் தாங்கள் கொண்டு வந்திருப்பதாக இப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply