மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை மீளமைப்பு

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை மீளமைப்பது தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் இன்று (17) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையிலான 106 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகளை 2 வருட காலத்தில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை இந்தியாவின் இர்கொன் கம்பனி மேற்கொள்ள உள்ளது. இலங்கை சார்பாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவும் இந்தியா சார்பாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளதாக அமைச்சு கூறியது. இந்நிகழ்வு போக்குவரத்து அமைச்சில் நடைபெறவுள்ளது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையி லான ரயில் பாதை புலிகளினால் தகர்க்க ப்பட்டதையடுத்து ரயில் சேவைகள் 1990 ஜூன் மாதத்தில் இடை நிறுத்தப்பட்டது.

ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட உள்ளன. மதவாச்சியில் இருந்து மடு வரை யான 43 கிலோ மீட்டர் தூர பாதை முதல் கட்டமாகவும் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை இரண்டாம் கட்டமாகவும் நிர்மாணிக்கப் படும். இதன்போது 5 பிரதான ரயில் நிலையங்களும், 5 உப ரயில் நிலையங்களும் 4 பாலங்களும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மாதோட்டம், திருக்கேதீஸ்வரம், நேரியகுளம் உட்பட ஐந்து இடங்களிலும் ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்ப ட்டுள்ளது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பாக இந்திய பொறியியலாளர் குழு கடந்த நாட்களில் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்ப தற்காக புலிகளினால் எடுத்துச்செல்லப்ப ட்டன.

இதனால் புதிதாக ரயில் பாதை அமைக்க வேண்டியுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையும் மீளமைக்கப்பட உள்ளது. வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை நிறைவடையும் நிலையில் உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக் கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply