புலிகளின் கப்பல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்பாடு

மலேசியாவில் வைத்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் திருத்தப்பட்டு தென்பகுதி கடல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் கூறியது. புலிகளுக்குச் சொந்தமான மேற்படி கப்பல் கடந்த வருடம் மலேசியாவில் வைத்து பிடிபட்டது. இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட இந்தக் கப்பல் தற்பொழுது காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தென் பிராந்திய கடற்படை தலைமையகத்தினால் திருத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்பொழுது கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தென் பிராந்திய கடற்படை கட்டளையிடும் தளபதி கொமடோர் ஆர். டி. பெரேரா தெரிவித்தார்.

மேற்படி கப்பலை துறைமுக பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடந்தவாரம் பார்வையிட்டார். மேற்படி கப்பலில் 3 ஆயிரம் தொன் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியும் எனவும் எதிர் காலத்தில் இதனை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் பெரேரா கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply