மாந்தை மேற்கில் மீள் குடியேறிய மக்களுக்கான சுய தொழில் வேலைக்காக உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது
மாந்தை மேற்கு பிரதேசத்தில் 5கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த 68 பேருக்கு சுய தொழிலுக்கான உபகரணங்கள் இன்று (17.08.2010) வழங்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச மக்களின் சுயதொழிலை மேம்படத்தும் பொருட்டு மன்னார் பிராந்தியத்திற்குப் பொறுப்பான தள்ளாடி படைத்தலமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகேயின் வழிகாட்டலில் 215ஆவது படைப்பிரிவின் சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மஹாவித்தாரணவின் ஏற்பாட்டில் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் சர்வோதயத்தின் அணுசரணையுடன் படைத்தரப்பினரால் முன்னெடக்கப்பட்டிருக்கும் மேற்படி வேலைத்திட்டத்தில்; சுமார் 68 பேருக்கு சுய தொழிலில் ஈடுபடுவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் 22பேருக்கு தையல் இயந்திரமும், தச்சு தொழிலில் ஈடுபடுகின்ற 23 பேருக்கு அதற்கான உபகரணங்களும், மேசன் வேலையில் ஈடுபடுகின்ற 23 பேருக்கு அவ்வேலைக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இன்று காலை (17.08.2010) கருங்கண்டல் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தள்ளாடி படைத்தலமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸ், 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகே, 215ஆவது படைப்பிரிவின் சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மஹாவித்தாரண, மற்றும் சர்வோதயாவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ். யுகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply