கண்ணிவெடி அகற்றும் பணியை தொடர இந்தியா இணக்கம்
இலங்கையின் வடபகுதியில் மிதி வெடிகள், கண்ணிவெடிகள் அகற் றுவதற்கான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு இந் தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை நாணயத்தின் படி 410 மில்லியன் ரூபா (3.65 அமெரிக்க டாலர்கள்) பெறுமதியான இந்த ஒப்பந்தம் நீடிக்கப்படுகிறது என் பதனை கடிதம் மூலம் பொருளா தார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. பீ. ஜயசுந்தரவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா அறிவித்துள் ளார். இலங்கையில் பல ஆண்டு காலம் சேவை புரி யும் ஹொரைசன் மற்றும் சர்வத்ரா நிறுவனங்களின் ஏழு இந்திய கண்ணிவெடி, மிதிவெடி அகற்றும் முக வர்களின் சேவைக்கால த்தை நீடிப்பதற்கு இந்திய அரசு இணங்கியுள்ளது என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தோரின் மீள் குடி யேற்றத்திற்கான பங்களிப்புடன் வட பகுதி ரயில் பாதை புனரமை ப்புக்குத் தேவையான மிதி வெடி, கண்ணிவெடி அகற்றல் பணிகளிலும் இக்குழுவினர் ஈடுபடவுள்ளனர். இலங்கையின் வடபகுதி யில் மீள் கட்டுமான மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதிலான இந்திய அரசின் தொடர்ந்த அர்ப்பணிப்பை இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மீண்டும் இச்சந்த ர்ப்பத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply