புலனாய்வு விசாரணைகளை கட்டாயம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது

இலங்கையில் இடம்பெற்றிருக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கட்டாயம் சுதந்திரமான முறையில் புலனாய்வு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது. கடந்த 19 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்ட சர்வதேச மனிதாபிமான தினத்தை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே சபை இவ்வாறு கோரி உள்ளது.

மனி்தாபிமானப் பணியாளர்கள் 17 பேர் 2006 ஆம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்டமையையும்,இம்மனிதாபிமானப் பணியாளர்களின் உறவினர்கள் நீதி கிடைக்கும் என்று இன்னமும் காத்திருக்கின்றமையையும் நினைவு கூர்ந்து இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

� இப்படுகொலைகள் குறித்து இன்னமும் முறையான விசாரணைகள் நடத்தப்படவே இல்லை என்றும் இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணைகளை நடத்தக் கூடிய வகையில் செயல் திட்ட முறைமை கிடையாது என்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு காணாமல் போதல்கள் உட்பட இம்மனித உரிமை மீறல்களை விசாரிக்கக் கூடிய வகையில் சுதந்திரமோ,அதிகாரமோ கிடையாது என்றும் மன்னிப்புச் சபை இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.

மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை தவறுகின்றது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply