கைதானோர் விடுதலை;ததேகூ கோரிக்கை : உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சு அறிவிப்பு
வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 765 பெண்கள், சிறுவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரியிருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவரது கடிதத்துக்கேற்ப, உரிய நடிவடிக்கை மேற் கொள்ளுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
அரியநேத்திரனின் கடிதம் கிடைத்தமை தொடர்பாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இம்மாதம் 18ஆம் திகதி தனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் அதன்பின்னர் நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்தமை தொடர்பாகவும் தனக்குக் கடிதங்கள் கிடைத்துள்ளன எனவும் அரியநேத்திரன் தெரிவிக்கிறார்.
அதன் பின்னர் நீதியமைச்சின் செயலாளர் சுசந்த கம்லத், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இம்மாதம் 18ஆம் திகதி கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
பெண்கள், சிறுவர்கள் கடந்த 30 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply