தூதுக் குழு ஒன்று அல்லது தூதுவர் ஒருவர் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படுவார்
முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு முதல்வர் அளித்த பதில்களும்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், சர்வதேச நாடுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும், ஐ.நா. சபைக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் கூட இலங்கை அதிபர் நிறைவேற்றவில்லை என்று எல்லோரும் சொல்கிற சூழ்நிலையில் மத்திய வெளி உறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் அவர்கள் உங்களை வந்து பார்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஏதாவது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?
இதே கருத்தை நான் நிருபமா ராவ் அவர்கள் என்னைச் சந்தித்த போது அவர்களிடம் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். அவர்களும் அதை மத்தியிலே உள்ளவர்களிடம் தெரிவித்து நான் கேட்டுக் கொண்டுள்ளவாறு அங்குள்ள நிலவரங்களை அறியவும் – இலங்கை அரசு வழங்கியுள்ள வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற் கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்கள். அதற்கான தூதுக் குழு ஒன்று அல்லது தூதுவர் ஒருவர் விரைவில் அனுப்பப்படுவார் என்பதை என்னிடத்திலே உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அந்தத் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இடம் பெறுவார்களா? இல்லை.
சில கட்சிகள் தூதுவரை அனுப்புவதை விட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி அங்கேயுள்ள நிலவரத்தை ஆராயலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு சில கட்சிகள் தூதுவரை அனுப்புவதே தேவையற்ற ஒன்று என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply