வடக்கில் புகையிரதப் பாதைகளில் குடியிருப்போரை வெளியேற்ற உத்தரவு

கடந்த காலத்தில் ஏற்பட்டவன் செயல்களைத் தொடர்ந்து வடபகுதியில் அழிக்கப்பட்ட புகையிரதப் பாதைகளில் குடியேறியுள்ள மக்களை ஒருவார காலத்தில் தமது வீடுகளை பிடுங்கிக் கொண்டு வெளியேறுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புப்புக்கு அமைவாக கடிதங்கள்  வழங்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் புகையிரப்பாதை செல்லும் பிரதேச செயலகங்களான தெல்லிப்பளை,உடுவில், நல்லூர்,யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரதேச செயலாளரகள் புகையிரதப்பாதைகளில் குடியிருப்பவர்களுக்கு இத்தகைய கடிதங்களை வழங்கியுள்ளார்கள்.

குறிப்பாக வலி,வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஒருசிலர் முன்னைய அரசு அதிபர்களின் அங்கிகாரத்துடன் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சுன்னாகம்,இணுவில் மற்றும் கோண்டாவில் புகையிரத நிலையங்களில் தமது இருப்பிடங்களை அமைத்து வாழ்ந்து வருவதுடன் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இந்த புகையிரத நிலையங்கள் திருத்தப்பட்டு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே புகையிரதப் பாதைகளில் குடியிருந்தவர்களில் ஒரு பகுதியினர் கடந்த ஜனவரி மாதமளவில் வெளியேறி இருந்த போதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் புகையிரப் பாதைகளிலும் புகையிரத நிலையங்களிலும் குடியிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply