வட மாகாண சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அரசியல் வேண்டாம்
வட மாகாணத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற இருக்கும் சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை அரசு நீதியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரியுள்ளார்.
அவர் வடமாகாண ஆளுநர், சுகாதார அமைச்சுச் செயலாளர், சுகாதார திணைக்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு எழுத்துமூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இச்சுகாதார தொண்டர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின்போது அரசியல் தலையீடு இடம்பெறும் வாய்ப்பு இருக்கின்றது என்றும் அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இம் மாவட்டங்களுக்கென தலா 250 பேர் சுகாதார தொண்டர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவர் இப்பதவிகளுக்கு அவரது ஆதரவாளர்களை நியமனம் செய்கின்றமைக்காக ஒவ்வொரு மாவட்டத்தின் சுகாதாரத் திணைக்களத்துக்கும் தலா 250 பேர் கொண்ட பெயர்ப் பட்டியல்களை அனுப்பி வைத்துள்ளார் என்றும் அப்பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களுக்கே நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்று விநோகராதலிங்கம் எம்.பி குற்றஞ்சுமத்தி உள்ளார்.
எவ்விதமான கொடுப்பனவுகளும் பெறாமல் அல்லது சொற்ப கொடுப்பனவுகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு நீண்ட காலங்களாக பணியாற்றி வரும் சுகாதாரத் தொண்டர்களுக்கும், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியானவர்களுக்கும் இந்நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும் சட்ட நடைமுறைக்கு அமைய இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply