முல்லைத்தீவு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தவும் அமைச்சர் : பசில்

முல்லைத்தீவு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை  துரிதப்படுத்துமாறு அமைச்சர் பசில் பணிப்புரை விடுத்துள்ளர்.மீள் குடியேற்றத்துக்காக வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் குடியமர்த்த துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் நேரில் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்து உரையாடியுள்ளதுடன் மீள் குடியேற்றம் தொடர்பான சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் கண்ணிவெடி அகற்றிய பகுதிகளில் உடனடியாக மீள் குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply