நிருபமா ராவ் இன்று முல்லைத்தீவு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இன்று முல்லைத்தீவு பகுதியைப் பார்வையிட்டார். காலை 8.30 அளவில் முல்லைத்தீவு சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து நிருபமா ராவ் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்த்தப்பட்டவர்களின் நிலைமை மற்றும் இந்திய நிவாரண உதவியை அவர் ஆய்வு செய்தார். பின்னர் திருகோணமலைக்குச் சென்று முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து மறுகுடியமர்ந்துள்ள மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என சிவநேசத்துரை கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நிருபமா ராவ், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply