சஜித் பிரேமதாச ஆதரவானவர்கள் அரசமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு
ஜனாதிபதியின் 18வது அரசியல் திருத்தம் தொடர்பாக தீர்மானமொன்றை எடுப்பதற்கு இன்று (01) முற்பகல் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளவில்லை தெரியவருகிறது.
எனினும், சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான லக்ஸ்மன் செனவிரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, எர்ல் குணசேகர, தலதா அத்துகோரள ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கவேண்டுமென இன்று நடைபெற்ற அரசியல்சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சஜித் தரப்பினர் 18வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென கருத்து தெரிவித்த போதிலும் அதனை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அதனை எதிர்ப்பது என இறுதித் தீர்மானம் எடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply