இலங்கைக்காக தமிழையோ தமிழுக்காக இலங்கையையோ விட்டுக்கொடுக்க முடியாது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கையர்களாக இருப்பதற்காகத் தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டுக் கொடுக்க தமிழர்களாகிய நாம் ஒப்புக் கொள்ளப் போவதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியாகத் தெரி வித்தார். முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து இனக் குழுமத்தின் அடையாளத்தையும் இணைத்துப் போற்றிக் கொள்வதாகவும், தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கையர் களாகவும் தமிழர்களாகவுமே வாழ விரும்புகிறார்கள் என்றும் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் முன்னிலையில் சாட்சிய மளிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படை யிலான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழு மையாக நடைமுறைப்படுத்த வேண்டு மென்று கோரிக்கை விடுத்த அமைச்சர், அச்சட்டத்தின் பிரகாரம் அதற்கு இருக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் வழங்கி, ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வையும் சமத்துவ உரிமையையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
அரசியலுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாத வரை அதற்காக நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் உழைத்துக்கொண்டே இருப்பதாகவும், இது வரை யுத்தம் துப்பிய கந்தகக் காற்றை மட்டும் சுவாசித்து வந்த மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் புதிய தென்றல் வீச வேண்டு மென்றும் அமைச்சர் கூறினார்.
ஆணைக் குழுவின் செப்டம்பர் மாத முதலாவது அமர்வில் நேற்று முன்தினம் சாட்சியமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா, எமது மக்கள் சந்திக்கும் இறுதியான இழப்பும், அவலமும் இதுவாகவே இருக்க வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்த அமைச்சர் இந்த மாற்றத்திற்காக மக்களோடு இணைந்து மகிழ்ச்சியடைவதாகவும் ஆனாலும் இது நிகழ்ந்துவிட்டதற்காக மட்டும் தமது இலட்சிய சுமையை இடைவழியில் இறக்கி வைத்துவிட முடியாதென்றும் குறிப்பிட்டார்.
எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் எமது மக்கள் அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவும், ஐக்கிய இலங்கைக்குள் மற்றைய இனக் குழும மக்களோடு சரிநிகர் சமமானவர்களாகவும், இனங்களுக்கிடையில் சமத்துவ ஐக்கிய முள்ளவர்களாகவும் வாழ அனுமதிக்கின்ற அரசியல் மாற்றமொன்று உருவாகும்வரை நாம் எமது பயணத்தில் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது’ என்று கூறிய அமை ச்சர் தேவானந்தா, யுத்தத்தை விரும்பிய புலிகளின் தலைமையை வெற்றிக் கொண்டமைக்காக ஜனாதிபதியைப் பாராட்டுவதாகவும் ஆனாலும், தமிழ் மக்களின் பிரச்சினை என்பது பயங்கரவாத பிரச்சினை அல்ல என்பதையும் ஜனாதிபதி நன்கு உணர்ந்து கொண்டுள்ளாரென உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
‘அன்றைய தவிர்க்க முடியாத காலச் சூழலே நாம் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம் மீது பிறப்பித்திருந்தது’ என்று குறிப்பிட்ட அமைச்சர் சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக தமது கடந்த கால வரலாற்றை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றார்.
மொத்தத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்காக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் எடுக்கப்படுகின்ற சிங்கள மக்களின் நலன்களுக்காகவுமே நாம் அன்று போராட எழுந்திருந்தோம்.இலங்கைத் தீவு என்பது பல்வேறு இன, மத, சமூக மக்களுக்குச் சொந்தமான நாடு.
காலத்துக்குக் காலம் அவ்வவ்போது மாறி மாறி வந்த இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியின் இருப் பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தமக்கு எதிராக சிங்கள மக்களே கிளர்ந் தெழுந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சிங்கள சகோதர மக்களின் கவனத்தை தமிழ் பேசும் மக்களுக்கெதிராகத் திசை திருப்பி விட்டிருந்தனர்.
இதன் காரணமாகவே 1956, 1958, 1977 மற்றும் 1981 முதல் 1983 வரை இலங்கைத் தீவில் இனக் கலவரங்கள் தூண்டி விடப்பட்டன.
இதில் பெரும் பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். உடமைகளை இழந்த நிலையில் தென் இலங்கையி லிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி அகதி களாகத் துரத்தப்பட்டார்கள்.
1974 இல் நடந்த நான்காவது உலகத் தமிழர் மாநாட்டு அனர்த்தங்களும், தென்காசியாவின் சிறந்த பொது நூலக மாக விளங்கிய யாழ். நூலகம் 1981 இல் அன்றைய ஆட்சியாளர்களால் எரித்தழிக் கப்பட்ட சம்பவமும் அன்றைய ஆட்சி யாளர்கள் மீது தமிழ் இளைஞர்கள் யுவதிகளுக்கு தீராத கசப்புணர்வுகளை உருவாக்கியிருந்தது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பிந்திய காலந்தொட்டு இன்று வரை இலங் கையில் எந்தவொரு இனக் கலவரமும் ஏற்பட்டதாக வரலாறு இல்லை. அவ்வா றானதொரு நிலையைத் தூண்டி விடுவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட் டிருக்கவும் இல்லை. இது ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தையே காண் பிக்கிறது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது முழுமையான அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் குறித்து நாம் சிந்தித்திருந்தாலும் அது குறித்து நாம் கவலை கொண்டிருக்க வில்லை.
ஆனாலும் கிடைத்த உரிமைகளை எடுத்துக் கொண்டு இன்னமும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக அதை ஒரு ஆரம்ப முயற்சியாக எடுத்துக் கொண்டு முன்னோக்கி சென்றிருக்கவில்லையே என்ற ஆதங்கமே நமக்கிருக்கிறது.
தமது விருப்பங்களுக்கு மாறாக அவசர அவசரமாக இலங்கையும் இந்தியாவும் தங்களது நலன்களுக்காக செய்து கொண்ட ஒப்பந்தமே இதுவாகும் என்று புலிகளின் தலைமை கிளப்பியிருந்த சுய கெளரவப் பிரச்சினை குறித்து நாம் அக்கறை செலு த்தவில்லை.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது மயிலே, மயிலே இறகு போடு என்று நாங்கள் இரந்து கேட்டு பெற்றுக் கொண்ட யாசகம் அல்ல. அது அன்றைய எமது அனைத்து விடுதலை இயக்கங் களினதும் நீதியான போராட்டமும் அர்ப்பணங்களும் பெற்றுத் தந்த மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானதில் கணிசமான பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை நான் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவு யுத்தப் பாதைக்கு இழுத்துச்சென்று எமது மக்களையும் அழியவைத்து, தனது இயக்க உறுப்பினர்களையும் அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்தது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தவிர, எதையுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்காமல் பெற்றுக் கொள் வதற்கு மாறாக இருந்தவைகளையும் துடைத்து அழித்து தொலைத்து, அழிவுகளை மட்டும் தமிழ் மக்கள் மீது அலுவலங்களாக சுமத்தி விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் அழிந்து போன நிகழ்வானது தனக்குத் தானே அவர் தோண்டிய படுகுழி என்பதே உண்மையாகும்.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என்பன உருவாக் கப்பட்ட போது அந்த ஒப்பந்தங்களை கிழித்தெறிந்து அதை தடுத்து நிறுத்தி யிருந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மை யினம் சார்ந்த அன்றைய அரசியல் தலை மைகளே என்பதில் எந்தவித மறுபேச்சுக்கும் இங்கு இடமில்லை.
ஆனாலும், இலங்கை – இந்திய ஒப் பந்தம் முதல், அதற்கு பின்னரான அனைத்து முயற்சிகளும் தவறவிடப் பட்டமைக்கான தவறுகளை தமிழ்த் தலைமைகளே ஏற்க வேண்டும்.
கிடைத்ததை எடுத்துக் கொண்டு மேலும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக கட்டம் கட்டமாக முயன்று பெற்றுக் கொள் ளாமல் கிடைத்தவைகள் அனைத்தையும் அரை குறை தீர்வு என்று தட்டிக் கழித்து வந்த அனைத்து தலைமைகளுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply