தமிழ் அமைப்புகளுடன் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் சந்திப்பு
லண்டன் வெஸ்மின்ஸ்ரர் சென்றல் ஹோலில் கடந்த சனிக்கிழமை மாலை (செப். 04) நடைபெற்ற தமிழ் அமைப்புகளுடனான பிரித்தானிய தொழில் கட்சியின் சந்திப்பின் போதே தொழில் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டார்.
அன்று மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான கீத்வாஸ், சிவோன் மக்டோனால், மைக் கப்ஸ், ஸ்ரெலா கிறிஸி, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கிளவுட் மோறஸ், ஜோன் றயன் மற்றும் ஈலிங் கவுன்சிலஸ் லீடர் யூலியன் பெல் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர்.
இக்கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழம், பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு, ரி லாப் போன்ற தமிழர் அமைப்புக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில் கட்சிக்கான தமிழர்களின் அமைப்புத் தலைவர் சென் கந்தையா இச்சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply