18வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு 159 எம்.பிக்களின் ஆதரவு
அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க உள்ளனர். ஏற்கனவே ஆளும் தரப்பில் 144 உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 8 உறுப்பினர்களும் இவர்களில் அடங்குகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட அப்துல் காதர், பீ.திகாம்பரம், பிரபா கணேசன், லக்ஷ்மன் செனவிரட்ன, எர்ள் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாளை முற்பகல் அரசாங்கம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.
18வது அரசியல் யாப்பு திருத்தம் என்பது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது அல்ல எனவும், அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை எனவும், இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமானது எனவும் உயர் நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய 18வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு மாத்திரமே தேவையாகவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply