பிரபல தமிழ் திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் மரணமானார்

தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான முரளி மாரடைப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று அதிகாலை உயிர் இழந்துள்ளார்.நேற்று இரவு வீட்டில் இருந்தபோது இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் இறந்து விட்டார். இறக்கும்போது வயது 47.

முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. . புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், சேரன், நாசர், சரத்குமார்,ராதிகா,சூர்யா, மனோபாலா, ராமநாராயணன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். முரளியின் உடல் நாளை தகனம் செய்யப்படுகின்றது. அதையொட்டி அனைத்துப் படப்பிடிப்புகளும் இரத்துச் செய்யப்படுகின்றன.

சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான பூ விலங்கு படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனவர் இவர்.காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித் தந்த வானம், புதுவசந்தம், ஆனந்தம், வெற்றி‌கொடிகட்டு, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக நடித்திருக்கும் படம் பானா காத்தாடி ஆகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply