பாகிஸ்தான் ஆயராக யாழ். விக்டர் ஆண்டகை

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்பணியாளர் விக்டர் ஞானப்பிரகாசம் அடிகளார் பாகிஸ்தான் கராச்சி நகர் குவேற்றா மறை மாவட்ட ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் இந் நியமனத்தை வழங்கியுள்ளதுடன் ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வருடம் தமது குருத்துவ அர்ப்பண வாழ்வின் பொன் விழாவையும் நினைவு கூருகிறார்.

இதனையொட்டி பாஷையூர் அந்தோனியார் ஆலய பங்கு மக்கள் தமது மண்ணின் மைந்தனான ஆயருக்கு செங்கம்பள வரவேற்பளித்து மகிழ்ந்தனர். புதிய ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலியும் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுகளில் பெருமளவிலான குருக்கள் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply