தினமுரசு நாளிதழாக வரவேண்டுமென்பதே எல்லோரதும் விருப்பம்
மக்களுக்கு சேவை புரியக் கூடியதான பத்திரிகையாக தினமுரசு நாளிதழ் வெளிவர வேண்டுமென சட்டத்தரணி ரங்கன் தெரிவித்துள்ளார்.
தினமுரசு யாழ் தலைமைக் காரியாலயத் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற சாதி வேறுபாடுகள் சமூக ஒடுக்கு முறைகளால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான காலகட்டங்களில் அந்த மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் விதத்தில் ஊடகங்கள் தமது பணிகளை ஆற்ற வேண்டுமென்பதுடன் அந்தப் பணியை தினமுரசு நாளிதழ் திறம்பட ஆற்ற வேண்டும்.
வார இதழாக வந்த தினமுரசு பத்திரிகை நாளிதழாக வரவேண்டுமென்பது எல்லோருடைய விருப்பமுமாகவே இருந்தது. அதற்கமைவாக இன்று இந்த காரியம் கைகூடியுள்ளமையானது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உழைக்கவுள்ள ஆசிரியர் குழாமையும் மற்றும் இதர துறைசார்ந்தோரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் ரங்கன் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக நிறுவனப் பெயர்ப் பலகையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் காரியாலத்தையும் நாடாவெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து காரியாலயத்தின் பல்வேறு தொழிற் கூடங்களுக்கும் சென்று அதன் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இந்து கிறிஸ்தவ குருமார்களின் ஆசியுரையைத் தொடர்ந்து பலரது உரைகளும் இடம்பெற்றன.
அதனை அடுத்து காரியாலயப் பணிகளை அமைச்சர் சம்பிரதாயபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
தினமுரசு நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியவற்றின் யாழ் தலைமைக் காரியாலயம் யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள பஸ்தியன் சந்தியில் அமையப் பெற்றுள்ளமை
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply