பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது
பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஏதுவான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்ட மூலங்கள் நேற்று இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்று சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டமாகும். அடுத்தது பாரதப் பூமியில் பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தேசிய விசாரணைப் பணியகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலமாகும்.
இந்த சட்ட மூலங்கள் இரண்டையும் நிறைவேற்ற ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளித்ததுடன் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி உட்பட பல கட்சிகள் ஆதரவளித்தன.
உலகலாவிய பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்;க்கவும் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குவும் பயங்கரவாத குற்றச்செயல்களுடன்; தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்குவதில் கடுமையான போக்கைக் கடைபிடிக்கவும் இந்த புதிய சட்ட மூலங்கள் வழிவகுக்கும் என சட்மூலங்களைச் சமர்பித்து உரையாற்றிய இந்திய உள் விவகார அமைச்சர் பீ. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply