அடுத்த வருடம் கல்வித் திட்டத்தில் பாரிய மாற்றம்
அடுத்தவருடம் கல்வித்திட்டம் பாரிய மாற்றங்களை எதிர்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தைச் சேர்ந்த நுகவல மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், முன்னர் ஆரம்பிக்கப் பட்ட மத்திய கல்லூரிகள் இலங்கை மக்கள் மத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. கிராமப் புறங்களில் இருந்து அறிஞர்கள் பல உருவாகக் காரணமாக இருந்தது.
ஆனால் இன்று அவ்வெண்ணக்கருவை அது திருப்தி செய்வதாக இல்லை. எனவே இக் காலத்திற்கு பொருத்தமாக கல்வித்திட்டத்தில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தவுள்ளோம்.
அதிலொரு கட்டமாக 1000 பாடசாலைகளை சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யவுள்ளோம். சாதாரணமாக மூன்று பாடசாலைகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இது அமையலாம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply