இலங்கையில் சர்வதேச விஞ்ஞான ஆய்வு நிலையம்

சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையமொன்றை இலங்கையில் நிறுவத் தீர்மானித்துள்ளதாக தொழில்நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சித்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று அமைச்சரின் தலை மையில் செவ்வாயன்று கொழும்பில் நடை பெற்றதுடன் சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான விஞ்ஞானத்துறை முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கருத் திட்டத்தின் கீழ் இலங்கையின் மின் வலு, கடல், வான், வர்த்தகத்துறைகளை விஞ்ஞானத்துறையுடன் இணைந்ததாக முன்னேற்றும் வகையில் மேற்படி சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையம் இலங்கையில் அமைக்கப்பட வுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்திலுள்ள விஞ்ஞான ஆராய்ச்சித்துறை நிபுணர்களை இணைத்துக்கொண்டு துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்ட ங்களை மேற்கொள்ளவும் கைத்தொழிற் துறையை முன்னேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply