கிளிநொச்சியில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த சந்திப்பு
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த சந்திப்பு வன்னி மாவட்ட மக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இச்சந்திப்புக்கு முதல் வன்னி பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கிளிநொச்சி நகரில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அனைத்து தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ் மக்களுக்கான எவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளது என வினவிய போது, தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் சில முன்மொழிவுகளை உள்ளடக்கிய தீர்வு யோசனை ஒன்று வரையப்பட்டுள்ளது.
இதனை அரங்கத்தில் உள்ள கட்சிகளும் ஆராயவுள்ளன. அதன் பின்னர் அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான தீர்வு யோசனையை நாங்கள் தயாரிப்போம். இதற்கு இன்னும் சில மாதம் தேவைப்படும் எனவும் அவர் கூறினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply