சீன நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று கொள்கலன்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வெடித்தே விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்படிருந்த வெடிபொருள் தாங்கி சீன நாட்டு நிறுவனமொன்றிற்குச் சொந்தமான கொள்கலன் ஒன்று வெடித்ததில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மூன்று கொள்கலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மூன்று கொள்கலன் தொடர்பிலும் பிரச்சினைகள் நிலவியதாகவும் இன்றைய தினம் அந்தப் பிரச்சினை முடிந்து குறித்த கொள்கலன்களை எடுத்துச் செல்ல சீன நாட்டுப் பிரஜைகள் இருவர் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு கெப் வாகனம் ஒன்றில் வருகைத் தந்துள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள் கொள்கலனை எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில் ஒரு கொள்கலன் வெடித்ததாகவும், அதன் பின்னர் மூன்று கொள்கலன்களும் வெடித்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply