ஊடகங்களுக்கு தடை இல்லை.

பிபிசி ஊடகத்திற்கோ, வேறு எந்த ஊடகங்களுக்கோ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒருங்கமைப்பு செயலாளர் ஏ.ஜி. குணவர்த்தனா கருத்து தெரிவித்த போது எந்த ஊடகமும் நல்லிணக்குழுவின் ஆணைக்குழுவின் சாட்சியமளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய ஆணையாளர் லக்ஷ்மன் உலுகல்லவை தொடர்பு கொண்டு கேட்டபோதும் அவரும் ஊடகங்களுக்கு எதுவித தடையும் விதிக்கபடவில்லை எனவும் தேவையாயின் நேரில்சென்று அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply