ஜனாதிபதி தலைமையிலான குழு நேற்று நியூயோர்க் சென்றடைவு

ஐக்கிய நாடுகள் சபையின் 65வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.

அங்கிருந்து அத்தூதுக்குழுவினர் மாநாடு நடைபெறும் நியூயோர்க் நகருக்குப் பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

உலகின் மோசமான பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் முதலாவது ஐ. நா. சபை மாநாடு இதுவாகுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், இம்மாநாட்டிற்கு வருகை தரும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கு இலங்கையின் அபிவிருத்தி உத்திகள் தொடர்பில் விளக்கவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்தது.

அத்துடன் மாநாட்டு அமர்வுகளில் கலந்து கொள்ளும் சர்வதேசத் தலைவர் களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன் பன்முகக் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிப்ப துடன் 1945ல் 56 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சபையில் 75வது நாடாக இலங்கை இணைந்து கொண்டது.

இம்முறை நியூயோர்க் நகரில் நடை பெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளல், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, மோதல்கள் நிறைவு பெற்றுள்ள நாடுகளின் அரசாங்கங்களைப் பலப்படுத்தல் மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படவுள்ளன.

மாநாட்டு அமர்வுகளின் போது இவை தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் இடம் பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான இலங்கை தூதுக்குழுவில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஜோன் செனவிரத்ன, உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இணைந்து கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply