விவேக் ஓபராய் ஐந்துகோடி ரூபாயில் புனரமைப்பதாக வாக்குறுதி அளித்த பாடசாலை கேட்பாரற்று கூரைகள் இன்றி கிடக்கிறது: சிவசக்தி ஆனந்தன்

கடந்த ஜுன் மாதம் வவுனியா வடக்கு வலயத்தில் அமைந்துள்ள மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தி நடிகர் விவேக் ஓபராயை தான் இந்தப் பாடசாலையைத் தத்து எடுத்து ஐந்துகோடி ரூபாய் செலவில் இப்பாடசாலையைப் புனரமைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார்.

அவர் பொறுப்பேற்றுக் கொண்டதால் இன்று இப்பாடசாலையை ஒருவரும் திரும்பிப் பார்ப்பதில்லையென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டியுள்ளார்.

இப்பாடசாலையின் கூரைகள் முழுவதும் கழற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்குவதற்கு இடவசதியில்லை. இந்நிலையில் இரண்டு பெண் ஆசிரியர்கள் யாழிலிருந்து வந்து இங்கு தங்கியிருந்து கற்பிக்கின்றனர்.

ஆசிரியர்கள் அனைவரும் வெளியிலிருந்து வருவதால் இங்கு அவர்கள் தங்கியிருப்பதற்கான வசதிகள் உடனடியாகச் செய்துகொடுக்கப்பட வேண்டும்.

தொடங்கிவிட்ட மாரிக்காலத்தில் பிள்ளைகள் பாடசாலையினுள் அமர்ந்து கல்விகற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி பின்தங்கிய பிரதேசமாக இருப்பதால் மின்சாரவசதி, தங்குமிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாபோதிலும் ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புக்களை நடத்தி இம்மாணவர்களின் கல்வியை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.

இதேநிலைதான் மீள்குடியேறியுள்ள அனைத்து இடங்களிலும் நீடிக்கின்றது என்று கூறிய சிவசக்தி ஆனந்தன் இவை அனைத்தையும் துரிதகதியில் சீர்செய்வதற்கு தன்னால் இயன்றவற்றைச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply